Top Banner
Top Banner
ஜன.
12
2020
கனயடித்தமிழ் வானொலி புதிய பரிமாணத்தில்...
Published in: நம்மவர் நிகழ்வு
இல்லங்கள் தோறும் இனிதே இசைத்திட உலக வலையமைப்பில் 24 அலைவரிசைகளுடன் உலாவருகின்றது, உங்கள் வானொலி அது கனடியத்தமிழ் வானொலி.

கனடிய மண்ணில் முதல் தர தமிழர்களின் வானொலியாக இன்று 20 வருடங்களை நிறைவு செய்து 21 ஆவது ஆண்டில் உலக வலையமைப்பில் தனது ஒலிபரப்புச் சேவையினை புதிய வடிவில், புத்துணர்வூட்டும் வகையில் வானலைகளில் வசந்தம் அள்ளிதூவும் ஈழ விடுதலை உணர்வும் தேசியப் பற்றுடனும் தமிழ் மக்களுடன் பயணிக்கும் கனடிய தமிழ் வானொலியின் ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இசுகாபுரோ 305 மில்னர் அவின்யூவில் அமைந்துள்ள கட்டிட தொகுதியில் CTR வானொலியின் இயக்குநர் றொனால்ட் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுக்கு வானொலி சார்பாக தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜன், CTR வானொலி நிர்வாக உறுப்பினரும் தமிழர் தேசிய அவையின் ஊடக பேச்சாளருமான தேவா சபாபதி மற்றும் நீண்ட காலம் கனடியத் தமிழ் வானொலியில் அறிவிப்பாளர்களாகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாகவும் தமது வானொலிச் சேவையினை நடத்திவரும் ராஜமுகுந்தன் , சுஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கனடிய ஊடகங்கள் நடத்துநர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில்,

இயக்குநர் றொனால்ட் கூறுகையில், கனடிய தமிழ் வானொலியானது ஆரம்ப காலங்களில் தனியான வானொலிப்பெட்டிகள் மக்கள் மத்தியில் விற்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் 2009 ஆண்டுக்கு பின் தமக்கான வானொலிப் பெட்டிகள் விற்கப்படாமல் பழைய நேயர்களுடன் தொடர்ந்து செயற்பட்டதாகவும், பின்னர் இதனது தொழில்நுட்ப மாற்றஙகளுடன் இன்று இதற்கான புதிய வானொலிப்பெட்டிகள் 24 அலவரிசைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இன்று நம் மக்கள் மத்தியில் ஒரு வானொலிப்பெட்டி $65 விற்பனைக்கு விடப்படுகின்றது எனவும் பழைய வானொலிப்பெட்டி வைத்திருப்பவர்கள் அதனை எம்மிடம் கையளித்தால் புதியரக 24 அலைவரிசைகளை கொண்ட வானொலி $40 கையளிப்பதாகவும் குறிப்பிட்டார். மற்றும் நாளை 12 - 01- 2020 அன்று இங்கிலாந்திலும் தமது வானொலிச்சேவையினை ஆரம்பிப்பதாகவும் அங்கும் இந்த வானொலிப்பெட்டி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நோர்வே , பிரான்சிலும் இவ் வானொலிப்பெட்டிகள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வானொலி சார்பாக நிர்வாக உறுப்பினர்களான ராஜன் , தேவா சபாபதி அறிவிப்பாளர்கள் ராஜமுகுந்தன், சுஜா ஆகியோரும் உரையாற்றினர்,

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வானொலி தரப்பினர் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக CTR, வானொலிப்பெட்டியும் கையளித்தனர்.

செய்தியுடன் படங்கள் : வாழையூரான்
Share
  புகைப்பட தொகுப்பு
  • Photo 1 of (12)

  • Photo 2 of (12)

  • Photo 3 of (12)

  • Photo 4 of (12)

  • Photo 5 of (12)

  • Photo 6 of (12)

  • Photo 7 of (12)

  • Photo 8 of (12)

  • Photo 9 of (12)

  • Photo 10 of (12)

  • Photo 11 of (12)

  • Photo 12 of (12)

  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்