Top Banner
Top Banner
ஜன.
11
2020
சளி பிரச்சனையை குறைக்க உதவும் பிராணாயாமங்கள்
Published in: வாழ்வியல்
ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சனைக்கு பஸ்திரிகா பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம், பிராமரி பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் உள்ளன.

பஸ்திரிகா பிராணயாமம்

தரையில் ஆசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து, முதுகு போன்றவற்றை நேராக வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கைகளை நேராக வைத்துக்கொண்டு இரு நாசித்துவாரங்களின் வழியாக வேகமாக மூச்சை உள்ளிழுத்து, வேகமாக வெளியே விட வேண்டும். இப்படி ஒருவேளைக்கு 10 முறை செய்ய வேண்டும். இதைச் செய்வதால், நெஞ்சில் கட்டியாக இருக்கும் சளி மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கு அடைத்துக்கொண்டு சுவாசிக்கச் சிரமப்பட்டு, வாயால் சுவாசிப்பவர்கள் இந்தப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலன் பெறலாம். இவை நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் தரும்.

நாடி சுத்தி பிராணயாமம்

வலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் மடித்து வைத்து, வலது நாசியில் கட்டை விரலும், இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும். இடதுபக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து, வலப்பக்க நாசியின் வழியாக வெளியேவிட வேண்டும். பிறகு வலது பக்க நாசியின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியேவிட வேண்டும். இதேபோல் 20 முறை செய்யலாம். இந்தப் பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். மனதை ஒருநிலைப்படுத்த உதவும். இதை எல்லா வயதினரும் செய்யலாம்.

பிராமரி பிராணயாமம்

இரண்டு கையின் ஆள்காட்டி விரலைக் கொண்டு அதனதன் பக்கம் உள்ள காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியிடும்போது `ம் கார...’ (M kara) என்று உச்சரிக்க வேண்டும். இதேபோல் 10 முறை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அடிக்கடி தொண்டையில் வரும் தொற்றுகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டை கரகரப்பாக இருப்பது, தொண்டையில் சளி அடைத்துக்கொள்வது போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சூரிய நமஸ்காரம், மர்ஜரி ஆசனம், வியாகராசனம், பர்வதாசனம், ஷாஷங்காசனம், பத்மாசனம் போன்ற யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இந்த யோகாசனங்களை சுவாசக் குறைபாடுகள், நுரையீரல் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் செய்யலாம். இந்த ஆசனங்கள் உடலை வலிமையாக்கவும் உதவும்.
Share
  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்