Top Banner
Top Banner
டிச.
5
2019
சூடான் தீ விபத்தில் பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள்
Published in: உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் 50-க்கும் அதிகமான இந்தியர்களும் வேலை செய்து வந்தனர்.

இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Share
  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்