Top Banner
Top Banner
நவ.
11
2019
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்
Published in: விளையாட்டு செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. அடிலெய்டில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சி ஆட்டம் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மசூத் 22 ரன்னிலும், அசார் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 18 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

60 ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குறிப்பாக பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போன்று அதிரடி காட்டினார். இரண்டு பேரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

பாகிஸ்தான் 90 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்துள்ளது. ஆசாத் ஷபிக் 119 ரன்னுடனும், பாபர் அசாம் 157 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Share
  பிந்திய செய்திகள்
கல்கரியில் இரு வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
(06 Dec 2019)
தென்கிழக்கு கல்கரியின் அப்பிள்வூட் பகுதியில் இரு வாகனங்கள் மேலும்>>
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைகின்றனர்
(06 Dec 2019)
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் மேலும்>>
மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா
(06 Dec 2019)
மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் மேலும்>>
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு வழங்க ரணில் தீர்மானம்
(06 Dec 2019)
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் மேலும்>>
மன்னாரில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
(05 Dec 2019)
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, தோட்டவெளிப் பகுதியில் மேலும்>>
திகார் சிறையில் இருந்து விடுதலையானார் ப. சிதம்பரம்
(05 Dec 2019)
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மேலும்>>
யூடியூப்பில் புதிய வீடியோவை வெளியிடும் பாடகி சுசித்ரா
(05 Dec 2019)
கடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா மேலும்>>
டெஸ்ட் போட்டியில் அரிய வகை சாதனையை கோட்டை விட்ட ஸ்மித்
(05 Dec 2019)
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு மேலும்>>
சூடான் தீ விபத்தில் பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள்
(05 Dec 2019)
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான மேலும்>>
மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைக்கு நடத்த இணக்கம்
(05 Dec 2019)
மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்