Top Banner
Top Banner
நவ.
8
2019
போர்வெல் மரணங்களை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு
Published in: இந்தியா செய்திகள்
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் மூடப்படாத ஆழ்துளை குழாயில் தவறி விழுந்ததும் அவனை மீட்பதற்கு சுமார் 100 மணி நேரம் நடைபெற்ற அசுர முயற்சிகள் தோல்வியில் முடிந்ததும் மக்களை திகைப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

தொடர்ந்து, அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு என பல்வேறு மரணச் செய்திகள் வெளியாகி வருகின்றன. குறுகிய துளைக்குள் விழுந்த இளந்தளிர்களின் உடலை முரட்டுத்தனமாகப்பற்றி, வெளியே தூக்குவது இயலாத காரியம் என்பதால் குழந்தைகளை உயிருடன் வெளியே எடுக்கும் காரியம் போதுமான உபகரணங்கள் இல்லாததால் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்து வருகிறது.

இந்நிலையில், மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்டம், பீபீக்குளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் குடை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆழ்துளை குழாய்க்குள் மூடப்பட்ட குடையாக தலைகீழாக செலுத்தப்படும் இந்த கருவி, அதில் விழுந்து கிடந்த ஒரு பொம்மையை சேதமேதுமின்றி வெளியே எடுக்கும் செயல்முறை விளக்கத்தை அப்துல் ரசாக் செய்து காட்டினார்.

தலைகீழாக உள்ளே செலுத்தப்படும் இந்த மெல்லிய குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம்மையை கடந்து சென்ற பின்னர் பொத்தானை இயக்கி குடையை விரிப்பதுபோல் விரிவடையச் செய்ததும் சிக்கியிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்தவாறு வெளியே வந்தடைகிறது.

இந்த கருவியின் பலனும் பலமும் அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் சிறப்பாக அமைய வாழ்த்தும் அதேவேளையில் இதை உருவாக்கியுள்ள மதுரை அப்துல் ரசாக், ஏற்கனவே இதுபோல் மேலும் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share
  பிந்திய செய்திகள்
அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் தௌிவுபடுத்திய கோட்டாபய
(12 Nov 2019)
தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் மேலும்>>
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்
(12 Nov 2019)
மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது மேலும்>>
டேவிஸ்வில்லே அவென்யூவில் கண்டுபிடிக்கபட்ட சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன
(12 Nov 2019)
ரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் மேலும்>>
பைரவி நுண்கலைக்கூடம் - இசைச்சாரல் 2
(12 Nov 2019)
பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் 2 பாடல் போட்டி மேலும்>>
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு
(11 Nov 2019)
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த மேலும்>>
செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்
(11 Nov 2019)
செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் மேலும்>>
காதலில் விழுந்தார் அனுபமா பரமேஸ்வரன்
(11 Nov 2019)
தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை மேலும்>>
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்
(11 Nov 2019)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேலும்>>
நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா
(11 Nov 2019)
இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் கீத் வாஸ் மேலும்>>
வடக்கு டகோட்டாவில் ஏற்பட்ட மசகு எண்ணெய்க் கசிவு சீரமைப்பு
(11 Nov 2019)
வடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்