Top Banner
Top Banner
அக்.
21
2019
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
Published in: உலக செய்திகள்
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லெபனான் அரசு பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதற்கு எதிராக கடந்த 17 தேதி முதல் அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். போராட்டக்கார்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. நாட்டின் பல்வேறு இடங்கள் வன்முறை களமாக காட்சியளிக்கின்றன. எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் அரசுக்கு எதிராக முழங்கி வருகின்றனர். இதனால் லெபனான் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் லெபனானில் உள்ள தங்களது குடிமக்களை திரும்ப நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

லெபனானில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகமும், அமீரக வெளியுறவுத் துறையும் சேர்ந்து தங்களது குடிமக்களை திருப்பி அனுப்புவதற்காக சிறப்பு மையம் ஒன்று செயல்படுத்த உள்ளது என அமீரக தூதரக அதிகாரி சயித் சுல்தான் தெரிவித்துள்ளார்.

இதுவரை 132 சவுதி குடிமக்கள், ரபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக லெபனானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.

போராட்டம் வலுப்பெற்று வருவதால் பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.
Share
  பிந்திய செய்திகள்
அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் தௌிவுபடுத்திய கோட்டாபய
(12 Nov 2019)
தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் மேலும்>>
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்
(12 Nov 2019)
மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது மேலும்>>
டேவிஸ்வில்லே அவென்யூவில் கண்டுபிடிக்கபட்ட சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன
(12 Nov 2019)
ரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் மேலும்>>
பைரவி நுண்கலைக்கூடம் - இசைச்சாரல் 2
(12 Nov 2019)
பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் 2 பாடல் போட்டி மேலும்>>
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு
(11 Nov 2019)
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த மேலும்>>
செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்
(11 Nov 2019)
செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் மேலும்>>
காதலில் விழுந்தார் அனுபமா பரமேஸ்வரன்
(11 Nov 2019)
தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை மேலும்>>
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்
(11 Nov 2019)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேலும்>>
நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா
(11 Nov 2019)
இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் கீத் வாஸ் மேலும்>>
வடக்கு டகோட்டாவில் ஏற்பட்ட மசகு எண்ணெய்க் கசிவு சீரமைப்பு
(11 Nov 2019)
வடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்