Top Banner
Top Banner
அக்.
20
2019
கனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
Published in: கனடா செய்திகள்
கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தலை, ஆவலுடன் எதிர்பார்த்துகாத்திருக்கின்றது.

இந்த நிலையில், எதிர்பார்ப்பு மிக்க இந்த தேர்தல் நாளை (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மற்றும் கொன்சர்வேடிவ் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுவதுடன் தேர்தலில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, அங்கு 1,57,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின் போது பல்வேறு வழிகளில் கனடாவுக்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்றவர்கள்.

இதை தவிர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழகத்தை சேர்ந்தவர்கள் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். எனினும், நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களுக்கு கனடிய தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

தொடக்க காலம் தொட்டே தமிழர்கள் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். ஆனால், அந்த நிலைமை சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகிறது.

உதாரணமாக, கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபையீசன் நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்தவர். அதன் பிறகே, கடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் என்று கூறுகிறார் பத்மநாதன்.

மற்ற அனைத்து கனேடியர்களை போன்றே தத்தமது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட திறன்களையும், அடுத்து அரசியல் பின்புலன்களை அடிப்படையாக கொண்டும், தமிழ் சமுதாயத்துக்கு, குறிப்பாக இலங்கை விவகாரத்தில் வலுவான கருத்து கொண்டுள்ள வேட்பாளர்களை கண்டுணர்ந்து தமிழர்கள் வாக்களிப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

இம்முறை கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் ஒருவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவர், பீப்பிள் பார்ட்டி ஒஃப் கனடாவின் சார்பில் ஒருவர் என நான்கு தமிழ் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர்.

இவர்களில், கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் களமிறங்குகிறார். நியூ டெமாகிரட்டிக் கட்சியின் சார்பில் இம்முறை தமிழர்கள் எவரும் போட்டியிடவில்லை.
Share
  பிந்திய செய்திகள்
அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் தௌிவுபடுத்திய கோட்டாபய
(12 Nov 2019)
தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் மேலும்>>
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்
(12 Nov 2019)
மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது மேலும்>>
டேவிஸ்வில்லே அவென்யூவில் கண்டுபிடிக்கபட்ட சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன
(12 Nov 2019)
ரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் மேலும்>>
பைரவி நுண்கலைக்கூடம் - இசைச்சாரல் 2
(12 Nov 2019)
பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் 2 பாடல் போட்டி மேலும்>>
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு
(11 Nov 2019)
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த மேலும்>>
செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்
(11 Nov 2019)
செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் மேலும்>>
காதலில் விழுந்தார் அனுபமா பரமேஸ்வரன்
(11 Nov 2019)
தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை மேலும்>>
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்
(11 Nov 2019)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேலும்>>
நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா
(11 Nov 2019)
இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் கீத் வாஸ் மேலும்>>
வடக்கு டகோட்டாவில் ஏற்பட்ட மசகு எண்ணெய்க் கசிவு சீரமைப்பு
(11 Nov 2019)
வடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்