Top Banner
Top Banner
அக்.
9
2019
கனேடிய பிரதமரை போலியானவர் மற்றும் மோசடிகாரர் என சாடியுள்ள எதிர்க்கட்சி
Published in: கனடா செய்திகள்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலியானவர் என்றும், மோசடிகாரர் என்றும் பிரதமர் பதவிக்கான போட்டிக்களத்தில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ரூவ் ஸ்கீர் (Andrew Scheer) குற்றம்சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டாவது தடவையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது விவாதத்தின் போது பிரதமர் ட்ரூடோவை, அன்ரூவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேவேளை, ட்ரூடோவின் கறுப்பு முகம் தொடர்பான விவகாரத்தையும் கையில் எடுத்துள்ள அன்ரூவ் ஸ்கீர், “நீங்கள் போலியானவர் மற்றும் மோசடி மன்னன், நீங்கள் நாட்டை நிர்வகிக்க தகுதியற்றவர்” என்று ட்ரூடோவை சாடியுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரேபியன் நைட்ஸ் விருந்துபசாரத்தில் முகம், கழுத்து மற்றும் கைகள் என கருப்பு நிறத்தில் அலங்காரம் செய்திருந்த ஔிப்படத்தை கடந்த மாதம் ரைம்ஸ் நாளிதழ் வௌியிட்டிருந்தது.

இந்த விடயத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்கட்சியினர், பிரதமர் மீது அவதூறான கருத்துக்களை வௌியிட்டு வருகின்றனர்.

அதேவேளை, ட்ரூடோ உயர்கல்வி கற்கும் போது விழாவொன்றில் விநோதவுடை அணிந்திருந்த காணொளியொன்றும் வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
  பிந்திய செய்திகள்
ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்
(21 Oct 2019)
ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
(21 Oct 2019)
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்
(21 Oct 2019)
வங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>
டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
(21 Oct 2019)
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
(21 Oct 2019)
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>
கவின் கலாலயாவின் "நயனம்" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்
(21 Oct 2019)
திகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்
(20 Oct 2019)
தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>
கனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
(20 Oct 2019)
கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி
(19 Oct 2019)
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>
நோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
(19 Oct 2019)
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்