Top Banner
Top Banner
அக்.
8
2019
தேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்கு துரித கதி தொலைபேசி சேவை
Published in: இலங்கை செய்திகள்
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக முறையீடு செய்வதற்கான துரித கதி தொலைபேசி சேவையை TISL அறிமுகம் செய்துள்ளது. முறைப்பாடானது 076 3223662 மற்றும் 076 3223448 அல்லது pppr@tisrilanka.org என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்ய முடியும்.

பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல் (Programme Protection for Public Resource) தொடர்பான செயற்றிட்டமானது கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதன் வேலை குறிப்பாக பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் பற்றியமாகும். 2019 தேர்தலுக்கு அப்பால் 25 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கண்காணிப்பாளர்களும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் 180 பேரும் இத்தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடுகின்றனர்.

TISL சகல வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொது அவலுவலர்களையும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகக்கும் ஏற்ப செயற்படுமாறு வேண்டுகிறது. குறிப்பாக 2141/52 எனும் விசேட வர்த்மானி அறிவித்தலிலுள்ள விதிகள் பற்றி மேலதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும். அதன் படி அரச உத்தியோகத்தர்களது நடவடிக்கைகளுக்காக அரசுக்குச் சொந்தமான வாகனங்களை பாவித்தல், விசேட பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் என்பன இதில் அடங்கும்.

TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர தெரிவிக்கையில், சகல உள்ளுராட்சி மன்றங்கள் தொடக்கம் அரச முதலீட்டு கூட்டுத்தாபனங்கள் வரையிலான சகல அரச ஊழியர்களும் தேர்தல் சட்டத்தை மீறினால் ஏற்படும் தண்டனைகள் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படாத பட்சத்தில் அரசியலமப்பின் உறுப்புரை 104 GG இன் பிரகாரம் மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டணை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

கடந்த காலங்களில் சிரேஷ்ட அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டப்படுவதற்கும் காரணமாய் அமைந்திருந்தது. ஆகையால், தேர்தல் காலங்களின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் குறித்து அரச அலுவலர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க இந்த எடுத்துக்காட்டுகள் உதவும் என்று நாம் நம்புவதோடு அரசியல் தலையீட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரச ஊழியர்களுக்கு இவை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
Share
  பிந்திய செய்திகள்
ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்
(21 Oct 2019)
ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
(21 Oct 2019)
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்
(21 Oct 2019)
வங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>
டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
(21 Oct 2019)
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
(21 Oct 2019)
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>
கவின் கலாலயாவின் "நயனம்" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்
(21 Oct 2019)
திகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்
(20 Oct 2019)
தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>
கனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
(20 Oct 2019)
கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி
(19 Oct 2019)
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>
நோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
(19 Oct 2019)
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்