Top Banner
Top Banner
அக்.
2
2019
கவர்ச்சியை குறைக்க யாஷிகா ஆனந்த் முடிவு
Published in: சினிமா
சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டிபார்ப்பது சிலரின் வேலையாக இருக்கிறது. அப்படி சீண்டுபவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்துவிடுகிறார் யாஷிகா ஆனந்த். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “சினிமாவில் நடிப்பது போலத் தான் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பார்கள் என நினைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. சினிமாவில் நான் கவர்ச்சியாக நடிப்பதால், என்னிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தம் கிடையாது.

இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும். சிலர், போலி கணக்கு மூலமாக வந்து தவறாக கமென்ட் செய்யும்போது கோபம் வந்துவிடும். அதுதான் அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கிறேன். அதுக்கு பிறகு அவர்கள் வாலாட்ட மாட்டார்கள். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நான் நடித்தது கூட இப்படிப்பட்ட சீண்டல்களுக்கு காரணமாக இருக்கலாம். அந்த படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.

அதில் நடிக்க ஒப்புக்கொண்டது என்னுடைய தவறுதான். என்னிடம் கதை சொன்னபோது இல்லாத விஷயங்களை எல்லாம், ‘இப்படி பண்ணா நல்லாருக்கும், அப்படி பண்ணா நல்லாருக்கும்’ என்று சொல்லி படம்பிடித்தனர். படப்பிடிப்பு தளத்தில் அதை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால், இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்ய மாட்டேன். கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்” என்றார்.
Share
  பிந்திய செய்திகள்
ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை
(27 Jan 2020)
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் மேலும்>>
சட்பரியில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றல்
(27 Jan 2020)
சட்பரியில் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையின் மேலும்>>
ஒட்டாவாவில் வழமைக்கு திரும்பும் வாகன தரிப்பிடங்கள்
(27 Jan 2020)
ஒட்டாவாவில் கடுமையான குளிர்கால பனியைத் தொடர்ந்து, மேலும்>>
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு
(26 Jan 2020)
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய மேலும்>>
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்
(26 Jan 2020)
சீனாவிலிருந்து ரொறன்ரோவுக்குச் சென்ற 50 மதிக்கத்தவருக்கு மேலும்>>
வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை
(26 Jan 2020)
அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என மேலும்>>
குருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு - அசாமில் பரபரப்பு
(26 Jan 2020)
நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக மேலும்>>
2வது டி 20- வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
(26 Jan 2020)
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 மேலும்>>
காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்
(26 Jan 2020)
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா மேலும்>>
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்
(26 Jan 2020)
ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியை முழுமைபடுத்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்