Top Banner
Top Banner
செப்.
23
2019
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஓராண்டு பூர்த்தியும், வெற்றி விழாவும்
Published in: நம்மவர் நிகழ்வு
பொது அமைப்புகள் இன்று பல்வேறு வடிவங்களில் காளான்கள் போல் உருவெடுப்பதும் தொடர்ந்து தலைமைத்துவ பதவிகளுக்காக பொது அமைப்புகளில் பதவி மோகம் கொண்டு அலையும் புகழேந்திகளும், தாயக அபிவிருத்தி என்ற போர்வையில் புகழ்தேடும் சமூக சேவகர்களாக நடிக்கும் பிரமுகர்களுக்குமிடையில் புனிதத்தன்மையுடனும் தாம் படித்த பாடசாலைக்கும் ஊருக்கும் விசுவாசமாகவும் ஊர் மக்களுக்கும் தங்களால் ஆன அறப்பணியினை செவ்வனே வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு விடாப்பிடியாக கனடிய மண்ணில் சிறந்த பண்பாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடினமான உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கம் பெற்ற பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் ஓராண்டு பூர்த்தியும் இசை விருந்தும் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி 2019 அன்று இசுகாபுரோவில் அமைந்துள்ள பாபா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்கள் அவையுடன் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் ரொறோன்ரோவில் இயங்கும் சில அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் வருகை தந்திருந்தனர். வழக்கம் போன்று மங்கள விளக்கேற்றலுடன் அமைப்பின் தலைவர் ரெனிஸ்ரன் கனகரெட்ணம் தலைமையில் இடம் பெற்றது.

கனடிய கல்முனை பற்றிமா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அன்பினாலும் சிறந்த தலைமைத்துவ பண்புடனும் முன்னெடுத்து செல்வது மிகவும் பாராட்டுக்குரியதொன்றாக இன்று இடம் பெற்றுள்ளது என்றால் அதன் தலைவர் ரெனிஸ்ரன் கனகரெட்ணம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களுமே காரனமாக விளங்குகின்றனர்.

பல்வேறு அமைப்புகள் கனடாவில் உருவாக்கம் பெற்று சுயநலத்தோடும் பெயருக்காகவும் செயல்பட்டுவரும் அமைப்புகளுக்கெல்லாம் முன் மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் பற்றிமா கார்மேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பல்வேறுபட்ட தாயக சேவையிலும் பாடசாலைக்குமான உதவிகளை முன்னின்று செயல்படுத்தி வருவதும் இங்கு குறிப்பிடதக்கதொன்றாகும்.

கலை நிகழ்வுகளுடன் இடம் பெற்ற இரவு விருந்துபசார நிகழ்வில் அனைத்து கலை நிகழ்வுகளையும் தளிர் இளையோர் கலைஞர்கள் வழங்கியிருந்தனர். மற்றும் நிகழ்வினை ஆரம்பம் முதல் இறுதிவரை இனிய தமிழில் தொகுத்து வழங்கினார் சஞ்சை கனகரெட்ணம்.

வருகை தந்திருந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் கலை நிகழ்வை வழங்கிய கலைஞர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டு அழகிய இனிய பற்றிமாகல்லூரியின் ஆண்டு விழா இனிதான ஒரு பொழுதாக இரவு விருந்துடன் நிறைவு பெற்றது.

(வாழையூரான்)
Share
  பிந்திய செய்திகள்
ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்
(21 Oct 2019)
ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
(21 Oct 2019)
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்
(21 Oct 2019)
வங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>
டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
(21 Oct 2019)
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
(21 Oct 2019)
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>
கவின் கலாலயாவின் "நயனம்" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்
(21 Oct 2019)
திகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்
(20 Oct 2019)
தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>
கனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
(20 Oct 2019)
கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி
(19 Oct 2019)
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>
நோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
(19 Oct 2019)
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்